சிவந்தனின் அவர்கள் சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விசாரணை செய்யக் கோரி ஜெனீவா நோக்கிய நடைபயணம் நேற்று டோவர் சென்றடைந்து அங்கிருந்து கடல் மார்க்கமாக பிரான்ஸ் தேசத்தை சென்றடைந்தார். அவர் டோவர் கடலை கடந்தமை அவரின் இந்தப்பணயத்தின் முதல்ப் படியை தண்டியதாகவே கருதவேண்டும்.

சிவந்தன் அவர்கள் புதியதொரு வரலாற்றை தமிழீழத்திற்காய் எழுதிக்கொண்டிருக்கின்றார். அவரின் இந்த வரலாற்றுப் பயணத்திற்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் பிரித்தானிய பாரளுமன்றம் தொடங்கி டோவர் வரை தொடர்ச்சியாக எங்களது பங்களிப்பை வழங்கியிருந்தோம்.

தொடர்ந்தும் அவருக்கு எமது ஆதரவை வழங்குவோம். சிவந்தன் அவர்களின் இந்தப் பயணம் இனிதே நிறைவடைய எமது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தற்பொழுது சிவந்தன் அவர்கள் பிரான்ஸ் தேசத்தில் நடையணத்தில் இருக்கின்றார் ஆகவே பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவரும் சிவந்தன் அவர்களுடன் இணைந்து நடந்து உங்கள் தார்மீக கடைமையினை நிறைவு செய்யுமாறு அழைக்கின்றோம்

நாங்கள்

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்


© 2010 Tamil Kathir Portal · Powered by wwwl