பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ஷைலா ஹெர்ஷே. உலகிலேயே மிகப்பெரிய மார்பகம் உள்ளவர் என்ற கின்னஸ் சாதனை நூலிலும் இவரது பெயர் பதியப்பட்டுள்ளது.
29 வயதான இவர் இப்போது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றார். காரணம் இவரது அதிகமான ஆசைதான். தாய்மையின் அடையாளமான மார்பத்தை காட்சிப்பொருளாக்க இவர் நினைத்தார்.
உலகில் தன்னுடையதைவிட பெரிய மார்பகம் கொண்ட யாரும் இருகக்கூடாது என்று கருதியவர், அதற்காக அடிக்கடி பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்து கொண்டார். ஒருமுறையல்ல இருமுறையல்ல 30 தடவைகள் இந்த சத்திரசிகிச்சையை செய்துகொண்டுள்ளார்.
ஒவ்வொரு முறை சத்திரசிகிச்சையின் போதும் அவரது மார்பகத்தின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டது. அமெரிக்காவில் வசிக்கும் இவர் அங்கு சத்திரிசிகிச்சைக்கு தடையுள்ளதால் தனது தாய் நாடான பிரேசிலுக்கு சென்று சத்திரசிகிச்சையை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
இறுதியாக கடந்த யூன் மாதம் 30வது முறையாக சத்திரசிகிச்சை செய்து கொண்டார். அப்போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரது இரு மார்பகங்களிலும் கிருமிகள் தொற்றிப் பரவியதால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை தோன்றியது.
இதனால் இரண்டு மார்பகங்களையும் முழுமையாக அகற்றும் நிலைக்கு மருத்துவர்கள் வந்துள்ளனர்.


