எயார் பிரான்ஸ் விமானம் ஒன்று பிரேசில் நாட்டின் ரியோ டி ஜானெய்ரோ நகரில் இருந்து 443 பயணிகளுடன் பரிஸ் நகருக்கு புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட இரண்டரை மணி நேரத்தில் அதில் இருந்த 6 கழிப்பறைகளும் பழுதாகி இருப்பது தெரியவந்தது.

இதனால் விமானத்தை அவசரமாக தரை இறக்குவது என்று விமானி முடிவு எடுத்தார். விமானம் மீண்டும் ரியோ டி ஜானெய்ரோ நகருக்கு திரும்பியது. அதில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர்.

விமானத்தின் கழிப்பறைகள் பழுதுபார்க்கப்பட்டதன் பின்னர் மீண்டும் மறுநாள் அதே விமானம் பயணிகளுடன் மீண்டும் பரிஸ் நகரை வந்தடைந்தது.


© 2010 Tamil Kathir Portal · Powered by wwwl